தமிழ்நாடு அரசு, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினரின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு மற்றும் நவீன சலவையகம் அமைக்க புதுமையான திட்டத்தை செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ், தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற செலவினங்களுக்காக ரூ. 3 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது 20 ஆகவும், அவர்கள் பிற்படுத்தப்பட்டோராகவும் இருக்க வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அடங்கிய குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 10 பேர் கொண்ட குழுவாக விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.