20 லட்சம் மதிப்பிலான 22 சவரன் தங்க நகை கொள்ளை

1பார்த்தது
மயிலாடுதுறை சாரதா நகரில் வசிக்கும் கல்லூரி பேராசிரியர்கள் மணிகண்டன்-விஜயா தம்பதி திருச்சி சென்றிருந்தபோது, அவர்களது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து, 150 கிலோ எடையுள்ள லாக்கரை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். லாக்கரில் இருந்த சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 22 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ஆக்டிவா இருசக்கர வாகனமும் கொள்ளை போயுள்ளது. மணிகண்டனின் தந்தை ஹரிஹரன் அளித்த தகவலின் பேரில், போலீசார் சிசிடிவி பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை சேகரித்துள்ளனர்.