மயிலாடுதுறை: பெண்ணை ஏமாற்றிய 4 போ் மீது வழக்கு

82பார்த்தது
மயிலாடுதுறை திருவிழந்தூரைச் சேர்ந்தவர் ஷிபானா ஜாஸ்மின் (28). திருமணமாகி விவாகரத்து ஆன இவர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வந்தார். திருவாவடுதுறை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஜாகீர்உசேன் (23) என்பவருடன் ஷிபானா ஜாஸ்மினுக்கு அறிமுகம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதில் ஷிபானா கருவுற்றார். 

இதைத்தொடர்ந்து, ஷிபானா ஜாஸ்மினை திருவாவடுதுறையில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற ஜாகீர்உசேன், அவரது தாயார் சையது சுல்தான்பீவி, சகோதரர் நசீர்முகமது, உறவினர் ரசூல்பீவி ஆகியோருடன் சேர்ந்து மாத்திரை கொடுத்து கருவை கலைத்ததுடன் வீட்டை விட்டு விரட்டினார்களாம். 

ஜாகீர்உசேன் பல தவணைகளாக ஷிபானாவிடமிருந்து 14 சவரன் தங்கநகை மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தையும் பறித்துக்கொண்டதுடன், அவருடன் தனிமையில் எடுத்துக்கொண்ட வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டினாராம். 

இதுகுறித்து, ஷிபானா ஜாஸ்மின் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியது உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் ஜாகீர் உசேன் அவரது தாயார் சையது சுல்தான்பீவி, சகோதரர் நசீர்முகமது, உறவினர் ரசூல்பீவி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், ஜாகீர்உசைனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி