மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரம் புறவழிச்சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்க வந்த நபரிடம் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடை ஊழியருக்கும் மதுபானம் வாங்க வந்தவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சீர்காழி போலீசார் கடையின் ஊழியர் மற்றும் சூப்ரவைசர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.