மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் வாகன திருட்டு சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நம்பர் ஒன் காந்திஜி சாலையில், தனியார் வணிக வளாகம் அருகே பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளன. குற்றச் செயல்கள் அதிகரித்துள்ள நிலையில், காவல்துறை வழக்கு பதிவு செய்யாமல் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.