மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே. வாசன், சம்பா சாகுபடி பயிர் இன்சூரன்ஸ் செய்ய நவம்பர் 15ஆம் தேதியுடன் கடைசி நாள் என்பதை மேலும் 15 நாள் நீட்டித்து தர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். பிழையற்ற வாக்காளர் பட்டியல் தான் நியாயமான தேர்தலுக்கு வழிவகுக்கும் என்றும், தென் மாநிலங்களிலேயே சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வன்முறை, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்றவற்றில் தமிழகத்தில் தான் அதிக அளவு நடக்கிறது என்றும், மாணவிகள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், பெண்கள் மாணவிகள் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றும் தெரிவித்தார். விஜய் கருத்து குறித்து பேசிய வாசன், வரும் காலங்களில் பாஜக, அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேரும் என்றார்.