அரசு பேருந்து லாரி நேருக்கு நேர் மோதி விபத்து

1பார்த்தது
மயிலாடுதுறையில் இருந்து ஆனந்த தாண்டவபுரம் செல்லும் அரசு பேருந்து இன்று காலை வேப்பங்குளம் அருகே செம்மண் ஏற்றி வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து பயணிகள் நால்வருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.