மயிலாடுதுறையில் சடாதார குறித்து ஆளுநர் ஆர். என். ரவி பேச்சு

1பார்த்தது
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் மணிவிழா மாநாட்டில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, 500 ஆண்டுகளாக தருமபுரம் ஆதீனம் பாரத தேசத்தில் தர்ம சனாதனத்தை பாதுகாத்து வருவதாகவும், சனாதன கொள்கையை அழிய விடாமல் பாதுகாப்பதில் ஆதீனங்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் பேசினார். ஆங்கிலேயர் ஆட்சியில் நமது பாரம்பரியம், மொழி ஆகியவற்றை அழிக்க முயன்றனர் என்றும், தமிழ் மொழியை ஆங்கிலேயர்கள் வெறுத்தனர் என்றும், இதை எதிர்த்து மகாகவி பாரதியார் போராடியதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் மோடி தமிழ் மொழி மீது மிகுந்த மரியாதை உடையவர் என்றும், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மடாதிபதிகளை அழைத்து செங்கோல் வாங்கியது வரலாற்று நிகழ்வு என்றும், காசி தமிழ் சங்கமம் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் காசி விசுவநாதர் தரிசனம் செய்துள்ளனர் என்றும் ஆளுநர் பேசினார்.

தொடர்புடைய செய்தி