நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வருகை தந்த மத்திய மண்டல காவல்துறை தலைவர் வே. பாலகிருஷ்ணன், தேர்தல் பணிகளின் போது காவலர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும் என்பதால் உடல் மற்றும் மனரீதியாக தயாராக இருக்க அறிவுறுத்தினார். இதையொட்டி, இன்று (08.02.2026) மாவட்ட காவல்கண்காணிப்பாளர் Dr. K. S. பாலகிருஷ்ணன் தலைமையில், வேதாரணியம் முதல் கோடியக்கரை வரை 7 கி.மீ. ஓட்டப்பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி காவலர்களுக்கு புத்துணர்ச்சியையும் நம்பிக்கையையும் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.