மயிலாடுதுறை அடுத்த வழுவூர் கிராமத்தில் நடைபெற்ற கலியமூர்த்தி 33 ஆம் ஆண்டு குருபூஜை விழாவில் பங்கேற்ற அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன் செய்தியாளர்களிடம் பேசினார். 11 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் சிறப்பு தேர்தல் திருத்தும் பணி மூலம் வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, வாக்களிப்பு சதவிகிதம் உயரும் என்றார். கிராம மக்களுக்கு இது சிரமமாக இருப்பதாகக் கூறப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், டிடிவி தினகரன் அவ்வாறு கூறியது அவர் எங்கே செல்கிறார் என்பதைக் காட்டுவதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் கொலைகள் அதிகரித்துவிட்டதாகவும், காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றும் கூறினார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால், பொதுச் செயலாளரிடம் பேசுவதாக அவர் தெரிவித்தார்.