தோப்படி சக்தி மகா காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

442பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே வலிவலத்தில் உள்ள தோப்படி சக்தி மகா காளியம்மன் ஆலயத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெகு விமர்சையாக மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை (பிப். 20) யாகசாலை பூஜையுடன் தொடங்கிய விழா, இன்று அதிகாலை நிறைவு பெற்று, மேள தாளங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. 33 அடி உயரத்தில் புதிதாக கட்டப்பட்ட ராஜகோபுரம் மற்றும் மூலவர் கோபுர கலசங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி