மயிலாடுதுறை அடுத்த மாப்படுகை கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அடகு வைத்த நகைகளை வெளியில் மறு அடகு வைத்து மோசடியில் ஈடுபட்டதாக கிளர்க் நித்யா மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விவசாயிகள் புகார் அளித்ததையடுத்து, இருவரும் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில், நகைகளை அடகு வைத்து ஏமாந்த 17 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். நித்யா, ராஜேந்திரன் என்பவருக்கு மூன்று சவரன் தங்க நகையை விரைவில் திருப்பித் தருவதாக அலுவலக முத்திரையுடன் கையெழுத்திட்டு கொடுத்த புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.