மயிலாடுதுறை: காளி வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

405பார்த்தது
மயிலாடுதுறை: காளி வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
மயிலாடுதுறை அருள்மிகு பிரசன்ன மாரியம்மன் கோவிலில் தை மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு 42-வது ஆண்டு பால்குடத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில், 108 பால்குடங்களை ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். வீச்சரிவாள் ஏந்திய கருப்பண்ணசாமி, பச்சைக்காளி, பவளக்காளி, இடுகாட்டு காளி வேடமணிந்த பக்தர்கள், பம்பை, உடுக்கை, மேளதாளங்களுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து தரிசனம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி