மயிலாடுதுறை நெல் கொள்முதல்.. ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்துக்கான நெல் கொள்முதல் பணிகள் ஜனவரி 22 அன்று தொடங்கி, தற்போது 184 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. பிப்ரவரி 15 வரை 51,498 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 26,790 மெட்ரிக் டன் நெல் பாதுகாப்பாக இயக்கம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை கோடங்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
