மயிலாடுதுறை: கள்ளக்காதலியை கொன்ற வாலிபர்

0பார்த்தது
மயிலாடுதுறை: கள்ளக்காதலியை கொன்ற  வாலிபர்
மயிலாடுதுறை அருகே கங்கணம்புத்தூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஆனந்தராஜ் (28), புதுச்சேரியில் பழக்கமான திருமணமான பவானியுடன் (56) கள்ளக்காதலில் ஈடுபட்டு அவருடன் வசித்து வந்துள்ளார். இருவரும் திருப்பூரில் வேலை பார்த்து வந்த நிலையில், கோயில் திருவிழாவிற்காக கங்கணம்புத்தூர் கிராமத்திற்கு வந்துள்ளனர். இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த ஆனந்தராஜ், பவானியிடம் சமைக்காதது குறித்து தகராறு செய்துள்ளார். ஆத்திரமடைந்த ஆனந்தராஜ், பவானியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.