நாகப்பட்டினம் மாவட்டத்தில், கனமழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைவதைத் தடுக்க, விவசாயிகள் உடனடியாக வடிகால் வசதி ஏற்படுத்தி நீரை வடியச் செய்ய வேண்டும். வேர்ப்பகுதிக்கு காற்றோட்டம் அவசியம். ஊட்டச்சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, நீர் வடிந்த பிறகு யூரியா, ஜிப்சம், வேப்பம் புண்ணாக்கு கலவையை இட வேண்டும். சூரிய வெளிச்சம் தென்பட்டவுடன், யூரியா மற்றும் துத்தநாக சல்பேட் கலவையை இலைவழி உரமாகவும் தெளிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு வேளாண் துறை அலுவலர்களை அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.