நாகப்பட்டினம்: துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

3பார்த்தது
நாகப்பட்டினம்:  துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ஜனவரி 7-ஆம் தேதி நாகை, காரைக்கால் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தற்போது, காற்றழுத்த தாழ்வு தெற்கே நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து நாகை, காரைக்கால் துறைமுகங்களில் சனிக்கிழமை மாலை 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி