மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோட்டத்திற்குட்பட்ட பொறையார் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக வரும் 30ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். இதனால் பொறையார், எருக்கட்டாஞ்சேரி, தரங்கம்பாடி, சந்திரபாடி, காட்டுச்சேரி, ஆயப்பாடி, சாத்தனூர், சங்கரன்பந்தல், தில்லையாடி, திருவிடைக்கழி, டிமணல்மேடு, கண்ணங்குடி, மாத்தூர், திருக்கடையூர், அனந்தமங்கலம், ஆனைகோவில், திருமெய்ஞானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.