நாகப்பட்டினம் மாவட்டத்தில் 123 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், 03.09.2025 முதல் 11.11.2025 வரை குறுவை பருவத்தில் 1,24,646 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 1,09,680 மெ.டன் நெல் மூட்டைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகள், ஆலைகள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு நகர்வு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 14,966 மெ.டன் நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பாக உள்ளது. 27,795 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு ரூபாய் 301.68 கோடி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார். நேற்று மட்டும் 905 மெ.டன் நெல் இயக்கம் செய்யப்பட்டுள்ளது.