திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் நேற்று 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொது விநியோகத் திட்டத்திற்கு தனித்துறை அமைக்க வேண்டும், சரியான எடையில் அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ். பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.