விசுவநாதா் கோயிலில் திருப்பணி மேற்கொள்ள கோரிக்கை

74பார்த்தது
மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் உள்ள விசுவநாதர் கோயிலில் திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அகில பாரத இந்து மகா சபா கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சபாவின் மாநில பொதுச்செயலாளர் ராம. நிரஞ்சன் கூறியது: மயிலாடுதுறையை அடுத்த நீடூர் கள்ளிக்குளம் அக்ரஹாரத்தில் உள்ள 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பெரிய குளத்துடன் கூடிய விசுவநாதர் கோயில் முற்றிலுமாக சிதிலமடைந்துள்ளது. இக்கோயில் விக்கிரகங்கள் அனைத்தும் நீடூர் சோமநாத சுவாமி கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இங்கு வசித்த மக்கள் பலர் குடிபெயர்ந்து சென்றுவிட்ட நிலையில், இந்த தெருவின் பெயர் தற்போது அரபிக் தெரு என்று மாறி இருக்கிறது. 

இக்கோயிலை புனரமைத்து கட்டுவதற்கு கிராம மக்கள் பலமுறை முயற்சித்தும் இதுவரை நடைபெறாமல் உள்ளது. காசிக்கு இணையானதாக கருதப்படும் பெருமையுடைய இக்கோயிலையும், இதே பகுதியில் உள்ள லக்ஷ்மி நாராயண பெருமாள் கோயிலையும் தமிழக அரசும், இந்து சமய அறநிலைத் துறையும் விரைந்து நடவடிக்கை எடுத்து திருப்பணியை தொடங்கி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி