ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நல சங்கம் மாலை நேர தர்ணா

2பார்த்தது
ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நல சங்கம் மாலை நேர தர்ணா
தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நல சங்கம் சார்பில் நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்க கட்டிடம் முன்பு மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும், 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது. இதில் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

தொடர்புடைய செய்தி