நாகப்பட்டினம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக கலையரங்கில் "என் ஊர் என் கனவு- மாவட்ட தொலைநோக்கு திட்டம் 2030" குறித்த கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் சென்றடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வருங்காலத்தில் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட ஏதுவாக "என் ஊர் என் கனவு” இலக்கு 2030 உத்திகள் மற்றும் செயல்திட்டம் தயாரிப்புக்கான ஆலோசனை கருத்தரங்கம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. இதில் தனித்துணை ஆட்சியர் (ச. பா. தி. ) கோ. அரங்கநாதன், நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் ரா. சங்கர நாராயணன் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.