மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் இரண்டு நாட்கள் தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்றன. ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தட்டு எறிதல் போன்ற பல்வேறு போட்டிகள் இதில் இடம்பெற்றன. சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினார்.