தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் காணொளி வாயிலாக நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் 1.80 லட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டப் பயன்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் மற்றும் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத் தலைவர் என். கௌதமன் ஆகியோர் 3254 புதிய பயனாளிகளுக்கு ரூ. 4 கோடியே 93 லட்சத்து 18 ஆயிரத்து 800 மதிப்பிலான சமூக பாதுகாப்பு திட்டப் பயன்களை வழங்கினர். இவ்விழாவில் நாகப்பட்டினம் நகரமன்ற தலைவர், துணைத்தலைவர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.