பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்ற எஸ் பி

249பார்த்தது
பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்ற எஸ் பி
நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் Dr. K. S. பாலகிருஷ்ணன் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்த மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மொத்தம் 32 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். மேலும், காவல் நிலைய பொறுப்பு அலுவலர்களுக்கு மனுக்களை விரைந்து முடிக்குமாறு அறிவுரை வழங்கினார். ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் மனு நாள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி