மயிலாடுதுறையில் தமிழக வெற்றி கழகம் போராட்டம்

1பார்த்தது
இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் நடைபெற்று வரும் வாக்காளர் தீவிர திருத்தல் பணிகளில், வாக்காளர் சேர்த்தல் நீக்கல் பணிகள் முறையாக நடைபெறவில்லை என பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, தமிழக வெற்றி கழகம் சார்பில் வாக்காளர் தீவிர திருத்தல் பணிகளை திரும்ப பெற வலியுறுத்தி மயிலாடுதுறையில் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் குட்டி கோபி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி