மயிலாடுதுறையில் திருமுறை வீதி உலா நடைபெற்றது

0பார்த்தது
மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி ஐப்பசி மாதம் நடைபெறும் துலா உற்சவம் சிவாலயங்களில் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. தினமும் மயூரநாதர் ஆலயம், வதானீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட புகழ் பெற்ற ஆலயங்களில் பஞ்ச மூர்த்திகள் காவிரி கரைக்கு புறப்பாடாகி தீர்த்தவாரி வழங்குவது நடைபெற்று வருகின்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருமுறை வீதி உலா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட யானைகளில் பன்னிரு திருமுறைகள் ஏற்றி வைக்கப்பட்டு, வேத பாடசாலை மாணவர்கள் வேதம் வாசித்தபடி முன்னே செல்ல, மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலம் நடைபெற்றது. வீடுகள் தோறும் விளக்கேற்றி வைத்து பொதுமக்கள் பன்னிரு திருமுறைகளுக்கு வழிபாடு செய்தனர்.