மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த ஆற்றால் புரத்தில் உள்ள சிவலோக தியாகராஜ ஸ்வாமி திருக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. விழாவின் முதல் நாளான இன்று, சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, கோவில் கொடி மரத்தில் ரிஷப கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.