மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மாதம் 26 ஆம் தேதி வரை பெய்த கனமழைக்குப் பிறகு, இரண்டு வாரங்களாக மழை இல்லாததால் கோடை வெப்பம் போன்று பருவநிலை மாற்றம் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில், இன்று பிற்பகலில் இரண்டு மணி நேரம் பெய்த பலத்த மழையால் வைத்தீஸ்வரன்கோயில், செம்பனார்கோயில், குத்தாலம், எலந்தங்குடி, மங்கைநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.