நாகப்பட்டினம் மாவட்டம் புகழ்பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழா 21.11.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 30.11.2025 அன்று சந்தனகூடு நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது. இந்த விழாவிற்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் மூலம் சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்தும், காரைக்கால் வழித்தடத்திலும் சிறப்பு பேருந்துகளை 21.11.2025 முதல் 01.12.2025 வரை இயக்க ஏற்பாடு செய்துள்ளது. தினசரி பேருந்துகளுடன் கூடுதலாக 100 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். பேருந்து நிலையங்களில் விசாரணை மையங்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.