சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 167 ஆம் ஆண்டு பிறந்த நாள்

1பார்த்தது
நாகப்பட்டினம் பழைய பேருந்து நிலையம் அருகே சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 167வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற திமுக செய்தி தொடர்புச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், நாகப்பட்டினத்தில் சிங்காரவேலருக்கு முழு உருவச் சிலை அமைக்க நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினால், தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.