நாகை மீனவர்கள் 31 பேர் 3 விசை படகுகளுடன் கைது

56பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களை, இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் நம்பியார் நகர் மற்றும் அக்கரைப்பேட்டை மீனவர்கள், கடந்த 30 ஆம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.  இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி