திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரனை, நாகை நகர அதிமுக செயலாளர் தங்க. கதிரவன் மற்றும் திருமருகல் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் இரா. இராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்தனர். அப்போது, நாகை பனங்குடியில் முதுகெலும்பு தசை நார் வலுவிழப்பு நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தை தனன்யாவிற்கு பாரதப் பிரதமர் அவர்களின் சிறப்பு மருத்துவ உதவி வேண்டி, நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் MLA வழங்கிய பரிந்துரைக் கடிதத்தை வழங்கி முழு விவரத்தை கூறினர். உடனடியாக பாரதப் பிரதமர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய உதவி கிடைத்திட ஆவண செய்வதாக நைனார் நாகேந்திரன் உறுதியளித்தார்.