வேளாங்கண்ணி: வாலிபர் உடல் நசுங்கி உயிரிழப்பு

478பார்த்தது
வேளாங்கண்ணி அருகே கருவேலங்கடை பகுதியில் அரசு பேருந்து மோதி இருச்சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தூத்துக்குடி நோக்கிச் சென்ற அரசு பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது, இருச்சக்கர வாகன ஓட்டுநர் நிலை தடுமாறி கீழே விழுந்து பேருந்து அவர் மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கி உயிரிழந்ததார். பலியானவர் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் (30) என தெரியவந்துள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.