நாகப்பட்டினம்: மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துநர் நியமணம்

63பார்த்தது
நாகப்பட்டினம்: மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துநர் நியமணம்
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் நாகப்பட்டினம் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கியுள்ள சிறார்களுக்கு ஆற்றுப்படுத்தல் சேவை வழங்குவதற்கு மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துநர் நியமனம் செய்யப்படவுள்ளனர்.

 இப்பதவிக்கு உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப் பட்டம் பெற்ற தகுதியான நபர்கள் தங்களது சுயவிவரங்களுடன் கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களை இணைத்து 25.03.2025-க்குள் நன்னடத்தை அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண். 209, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகப்பட்டினம் என்ற முகவரிக்கு வந்துசேரும் வண்ணம் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் வல்லுநர்கள் கொண்ட தேர்வுக்குழு மூலம் நடைபெறும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர். 

தெரிவு செய்யப்படும் ஆற்றுப்படுத்துநர்களுக்கு அவர்கள் வருகையின் அடிப்படையில் ஒரு மாதத்திற்கு 27 நாட்கள் வீதம் ஒரு நிதிஆண்டிற்கு 324 நாட்கள் மதிப்பூதிய அடிப்படையில் ஒரு வருகைக்கு ரூ.1000 வழங்கப்படும். விவரங்களுக்கு தொடர்புடைய மாவட்ட நன்னடத்தை அலுவலரை தொடர்புகொண்டு தெளிவுபெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.