நாகை: அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு விழா

51பார்த்தது
நாகை: அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு விழா
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் கபடி விளையாட்டு போட்டிகளில் குறுவட்டம், மாவட்டம், மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுச் சீருடைகள், பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் குமார் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சுகுமாரன், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அன்பானந்தன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களையும், உடற்கல்வி ஆசிரியர்கள் சௌரிராஜன், லெனின் ஆகியோரையும் பாராட்டினர். மாணவ மாணவிகளுக்கு முன்னாள் மாணவர்கள் விளையாட்டுச் சீருடைகள் மற்றும் பதக்கங்களை நன்கொடையாக வழங்கினர்.

தொடர்புடைய செய்தி