திருமருகலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 100-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 100 கட்சிக் கொடிகள் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பாபுஜி முன்னிலை வகித்தார். நாகை மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
இதில், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், ஒன்றிய தலைவர் மாசிலாமணி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒன்றிய செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார். இதேபோல நடுக்கடை, சியாத்தமங்கை, துறையூர், திருப்பயத்தங்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் நிகழ்ச்சி நடைபெற்றது.