நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் TNPSC, TNUSRB, TRB தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் பல மாணவர்கள் அரசு வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். தற்போது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 07.02.2026 (சனிக்கிழமை) முதல் வார இறுதி நாட்களில் பயிற்சி வகுப்புகள் தொடங்கும். மேலும், TNPSC GROUP-II & II(A) மற்றும் GROUP-IV தேர்வுகளுக்கு 27.01.2026 (செவ்வாய்) முதல் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இலவச மாதிரித்தேர்வுகள் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.