பெண் தொழில் முனைவோருக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி, தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்துதல் உதவிகள் வழங்கப்படும். வியாபாரம், சேவை, உற்பத்தி தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம். மக்கும் பொருட்கள், விவசாய கழிவுப் பொருட்கள், தென்னைநார் தொட்டிகள், காகித கழிவு பென்சில், ஆடை வடிவமைப்பு, அலங்கார அணிகலன்கள், கண்ணாடி ஓவியம், பட்டுநூல் அணிகலன்கள், குழந்தைகள் பராமரிப்பு, வீட்டில் உணவுப் பொருட்கள், யோகா, வளர்ப்புப் பிராணி பராமரிப்பு, உடற்பயிற்சி, சலவை, மணப்பெண் அலங்காரம், மெகந்தி, டாட்டூ, சத்துமாவு உருண்டைகள், பேக்கரி, தானிய ஐஸ்கிரீம், எலுமிச்சை, வெட்டிவேர் எண்ணெய் தயாரிப்பு போன்ற தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.