வேதாரண்யம் தோப்புத்துறையைச் சேர்ந்த ஜெரினா, தனது கணவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வருவதாகவும், இந்து மதத்திலிருந்து இஸ்லாமியராக மாறி தன்னை 2016ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டதாகவும் ஆட்சியர் ஆகாஷிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவர் இரு குழந்தைகளை அழைத்துக்கொண்டு மணலி கிராமத்திற்குச் சென்று, அங்கு வேறொரு இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜெரினா குற்றம் சாட்டியுள்ளார்.