மேக்கேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. காவிரி நதியின் கடைமடைப் பகுதியில் வாழும் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்த திட்டத்தை மத்திய அரசு உடனடியாகத் தடுக்க வேண்டும். காவிரி நீரை முழுமையாகச் சார்ந்திருக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகள் ஏற்கெனவே நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.