நாகப்பட்டினம் தனியார் திருமண மண்டபத்தில் தேர்தல் தொடர்பான பயிற்சி காவலர்களுக்கு நடைபெற்றது. இதில் எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி, தேர்தல் காலங்களில் காவலர்கள் பணியாற்ற வேண்டிய முறைகள் குறித்து அனுபவம் வாய்ந்த காவலர்களைக் கொண்டு பயிற்சி அளித்தார். தமிழக சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும், தேர்தல் தேதி அறிவிப்பு வந்தவுடன் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நாகப்பட்டினம் மாவட்ட எல்லையை ஒட்டி புதுச்சேரி மாநில எல்லை உள்ளதால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், புதுச்சேரியில் இருந்து மதுபானம் கடத்தலை தடுக்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். பதட்டமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிந்து கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெற அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.