மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்

4பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய தொடர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு, தமிழகத்தில் வழங்கப்படும் பராமரிப்பு உதவித்தொகை மிகவும் குறைவாக இருப்பதாகவும், அண்டை மாநிலங்களான ஆந்திரா, பாண்டிச்சேரி, தெலுங்கானா, டெல்லி, ஒடிசா, திரிபுரா போன்ற மாநிலங்களில் வழங்கப்படும் தொகையை விட இது குறைவு என்றும் வேதனை தெரிவித்தனர். ஆந்திராவில் வழங்குவது போல் தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6000, ரூ.10,000, ரூ.15,000 என பராமரிப்பு உதவித்தொகை வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி