பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தில், இதுவரை பயன்பெறாத விவசாயிகளுக்காக சிறப்பு முகாம்கள் ஜூன் 15 வரை நடத்தப்பட உள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்கள், வேளாண் விரிவாக்க மையங்கள்,
இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி மற்றும் இ-சேவை மையங்களில் இந்த முகாம்கள் நடைபெறும். எனவே விவசாயிகள் முகாம்களில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.