நாகை: திமுக பூத் கமிட்டி கூட்டம்

72பார்த்தது
நாகை: திமுக பூத் கமிட்டி கூட்டம்
நாகை நகர திமுக வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், பாகநிலை முகவர்கள் (BLA), பூத் கமிட்டி உறுப்பினர்கள் (BLC) கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் நாகை மாவட்ட கழக செயலாளர்- தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் திரு. என். கெளதமன் தலைமை தாங்கினார், நாகை நகர் மன்ற தலைவரும் நகரச் செயலாளருமான மா.மாரிமுத்து முன்னிலை வகித்தார். நாகை சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர் திரு. பால். அருட்செல்வன் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் இரா. மேகநாதன், மாவட்ட பொருளாளர் மு. லோகநாதன் அவர்கள், அரசு வழக்கறிஞர் செல்வராஜ், நகர அவைத் தலைவர் முருகையன், பொதுக்குழு உறுப்பினர் திரு. பாண்டியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

மேலும் புதிதாக பொறுப்பேற்றுள்ள நாகை நகர மகளிரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களை அறிமுகம் செய்து பணி சிறக்க வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி