நாகை: புற்றுநோய் மருத்துவமனைக்கு உதவித்தொகை வழங்கல்

57பார்த்தது
நாகை: புற்றுநோய் மருத்துவமனைக்கு உதவித்தொகை வழங்கல்
நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பா கோவில் சர் ஐசக் நியூட்டன் பள்ளி மாணவ மாணவிகள் தங்களின் கலைத்திறனால் கைத்திறனை கொண்டு தீட்டிய ஓவியங்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தினர். ஓவியங்கள் அனைவரின் முன்பு பொது ஏலமிடப்பட்டது. அதில் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு ஓவியத்தை ஆர்வத்துடன் போட்டி போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர். அந்தத் தொகை மற்றும் பள்ளி நிர்வாகம் வழங்கிய உதவித்தொகை ஆகியவை சர் ஐசக் நியூட்டன் கல்வி குழுமத்தின் தாளாளர், முனைவர். த. ஆனந்த் மற்றும் மாணவ மாணவிகள் சென்னை அடையார் புற்றுநோய் மையத்தின் உளவியல் நிபுணர் டாக்டர் திவ்யராஜ் பிரபாகரிடம் வழங்கினர். டாக்டர். ஜி. பாலமுருகன் டாக்டர். வீனவாணி நல்லிபள்ளி முனைவர். சரண்யா சுந்தர்ராஜ் மற்றும். குணசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். முன்னதாக இந்நிகழ்விற்கு பள்ளி முதல்வர் திருமதி கா. வஹீதா வரவேற்புரை வழங்கி இயக்குனர்.த. சங்கர் முன்னிலை வகித்தார். பள்ளி ஆலோசகர் சா. ராமதாஸ் நன்றி கூறினார்.
Job Suitcase

Jobs near you