இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்திய காவல் பணி (IPS), இந்திய வனப் பணி (IFS) போன்ற உயர் பதவிகளில் உயர் சாதியினரின் ஆதிக்கத்தைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் நாகப்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகை எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நெப்போலியன் தலைமை தாங்கினார். நகர தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர் புபேஷ் குப்தா தொடக்கவுரை ஆற்றினார். இதில் திராவிடர் கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பெருமளவில் கலந்து கொண்டனர்.