கடந்த நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக அரசு ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு வாடகை வாகனங்களை வழங்கியது. இந்த நிறுவனங்கள் இடைத்தரகர்கள் மூலம் வாகனங்களை பயன்படுத்தியதால், ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு அரசு நிர்ணயித்த வாடகையைவிட குறைந்த தொகையே கிடைத்தது. இதனால், இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக தங்களுக்கு ஒப்பந்தம் வழங்க வேண்டுமென நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மனு அளித்தனர். மாத கடன், இன்சூரன்ஸ், பராமரிப்பு போன்ற சிரமங்களை சந்திப்பதாகவும், நேரடி ஒப்பந்தம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.