நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026ஐ முன்னிட்டு, 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நாகப்பட்டினம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு மற்றும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு, வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.